என்ன விலை அழகே

நம்ப முடியாது தான். இருந்தும், ஏமாற்று வேலை, பகல் கொள்ளை, தில்லுமுல்லு என்று பலவிதமான தொழில்களுக்கு இன்று சட்ட ரீதியான அனுமதி உண்டு. ஆனால் அதை நீங்களோ நானோ செய்தால் நிச்சயம் மாட்டிக் கொள்வோம். அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும். இன்றைய உலகின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரு மதிப்பு அல்லது விலை உண்டு என்பதை மறுக்க முடியாது. அன்பு-பாசம்-நேசத்துடன் பகிர்ந்து கொள்ளும் எதையும் தவிர, மற்ற எதுவுமே சும்மா கிடைக்காது. மதிப்பு என்றால் என்ன? எப்படி உருவாகிறது? மதிப்பின் … Continue reading என்ன விலை அழகே

கவுதம புத்தர்

எதுவும் நிரந்தரமல்ல. மாற்றம் மட்டுமே உண்மை. பிறப்பு பெரும் துக்கம். பிறப்பில்லாத நிலையை அடைய கர்மவினைகள் முடிவுக்கு வரவேண்டும். தேவர்களென்ன கடவுளே வந்தாலும் அவரும் கர்மவினைக்கு உட்பட்டவராகிறார். என் போதனைகள் அல்ல அவை. தம்ம போதனைகள் என்று சொல்லுங்கள். தம்மம் எனக்குப் பிறகு ஒரு 500 ஆண்டுகளாவது நின்று பிடிக்கும் என்று நினைக்கிறேன் என்றார் அவர். 500 என்ன 2500 ஆண்டுகளுக்கும் மேலாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது பவுத்தம். அதை விட வியப்பு : அந்தக் காலமோ, … Continue reading கவுதம புத்தர்

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து

எப்ப பாத்தாலும் தண்ணியிலேயே இருந்தா உருப்பட்ட மாதிரி தான். அநியாயமா செத்துப் போயிருவீங்க. நான் இருக்கேன்ல. வாங்க மச்சி என்று தாவரங்களைப் பார்த்து பூஞ்சை கூப்பிட்டிருக்காவிட்டால்...விட்டால்... அப்ரமென்ன.. பூமியின் கதையே மாறிப் போயிருக்கும். எல்லா உயிர்களும் கடலில் இருந்து தான் நிலத்துக்கு வந்தன என்பது தெரிந்ததே. இருந்தும் கிட்டத்தட்ட 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தாவர இனம் நிலத்துக்குக் குடி பெயர உதவிய அப்பேர்ப்பட்ட பூஞ்சை இனத்தை எப்படி, எந்த உயிரினத்துள் வகைப்படுத்துவது? உயிரியலாளர்கள் இன்று வரை … Continue reading ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

சுவை, மணம், பார்வை, கேட்டல், உணர்ச்சிகள் எல்லாமே நான் எனும் தன்னுணர்வால் (consciousness) ஏற்படும் குணாதிசயங்கள். இது மட்டும் இல்லாவிட்டால் அறிதல் அல்லது உணர்தல் என்பதே தோன்றி இருக்காது. இந்த அகநிலையின் (subjective) மேலே தான் அறிவியலின் அடித்தளமே அமைந்திருக்கிறது. இருந்தும் உயிரியலில் இதற்கான சரியான பதில் இல்லை. ஒருவேளை இயற்பியல் அல்லது நரம்பியல் துறை? கேள்வியோடு ஆரம்பிக்கிறார் மெய்யியல் பேராசிரியர் பிலிப் கொஃப் (Philip Goff). அவரின் Galileo's Error நூல், தன்னுணர்வை இன்னொரு கோணத்தில் … Continue reading எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் (2)

எல்லாத்துக்கும் ஐன்ஸ்டைன் அய்யா தான் காரணம். பிரபஞ்சத்தின் உருவாக்கம், செயல்பாடுகள் அனைத்துக்கும் ஒரு பொதுவான கோட்பாடு இருக்க வேண்டுமே (Theory of Everything). அதைக் கண்டுபிடிக்கும் வரை ஓயமாட்டேன் என்று தன் கடைசி மூச்சு வரை போராடியவர் அய்யா. அந்தக் காய்ச்சல் மற்ற இயற்பியலாளர்களையும் தொற்றிக் கொண்டு விட்டது. 1968 களில் கண்டுபிடிக்கப்பட்ட குவார்க்ஸ் (quarks) தனியாக வாழ்வதில்லை. ஜோடிகளாக இருக்கின்றன என்று தெரிந்தது தான் தாமதம். இயற்பியலாளர்கள் மத்தியில் ஒரே பரபரப்பு. அதுவும் ஒன்று மேல் … Continue reading கண்ணில் தோன்றும் காட்சி யாவும் (2)

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

மனிதன் நிலவில் இறங்கியது உண்மை அல்ல. அரிசோனா மாநிலத்தின் ஒரு வனாந்தரத்தில் கச்சிதமாய் நடிக்கப்பட்ட ஒரு நாடகம் அது. அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், அன்றைய துணை அதிபரின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டார். அதிபர் ஒபாமா கென்யாவில் இருந்து வந்த ஒரு பக்கா கம்யூனிஸ்ட். தேர்தல்கள் எல்லாமே ஏமாற்று வேலைகள் ... முக்கிய நிகழ்வுகளின் பின் உள்ள காரணங்களைத் தோண்ட ஆரம்பித்தால் நிச்சயம் அவற்றின் அடியில் சதி வலைகள் இருப்பது தெரியும். சூழ்ச்சிக்காரர்கள் இயங்குவது உண்மை. முழு … Continue reading என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் (1)

பள்ளியில் படித்த இயற்பியல் பாடங்களை மறந்துவிடுங்கள். வெளி, காலம், நேரம், பொருள்கள், ஒளி எதுவுமே குவாண்டம் உலகில் (அணுக்களின் உலகம்) இல்லை. பிரபஞ்சமே குவாண்டம் வீச்சில் ஏற்படும் மாற்றங்களின் பிரதிபலிப்பு. அனைத்துமே (நீங்கள், நான் உட்பட ) குவாண்டம் உலகின் சில சாத்தியக் கூறுகள். அவ்வளவே. Reality is not what it seems : the journey to quantum gravity என்கிற நூலை இப்படி ஆரம்பிக்கிறார் இயற்பியலாளர் கார்லோ ராவெல்லி (Carlo Rovelli). இன்றைய … Continue reading கண்ணில் தோன்றும் காட்சி யாவும் (1)

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்

நாம் எல்லாருமே ஒரு விதமான பைத்தியங்கள் என்று ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் ஒத்துக் கொள்ள மாட்டோம் - ஒரு சிலரைத் தவிர. என் நாடு, என் மொழி, என் மதம், என் கொடி தான் உலகிலேயே உயர்ந்தது என்கிறோம். எவனாவது கை வச்சான்னா பிச்சிருவேன் பிச்சி! சிலர் ஷேர்ட்டை மடித்தபடி கையைத் தூக்குகிறார்கள். மற்ற நாட்டுக்காரர்கள், வேறு மொழி பேசுவோர், வேற்று மதத்தவர்கள் எல்லாரும் உங்கள் மாதிரியே சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார்களே? இதைக் கேட்டதும் வீராப்பு குறைந்து … Continue reading இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்

உன் பார்வை போலே என் பார்வை இல்லை

கார்ல் மார்க்ஸ் சொன்ன தொழிலாளர்களின் புரட்சி ஏன் இன்னும் ஏற்படவில்லை? முதலாளித்துவத்தைக் கவிழ்க்கப் போவது யார்? புத்தகங்கள் இருக்கும் போது நண்பர்கள் எதுக்கு? ஆயிரத்தில் ஒருவன் கட்டுரையில் என்னை ஆச்சரியப்பட வைத்தவர்கள் இரண்டு பேர் என்று குறிப்பிட்டிருந்தேன். இதோ இரண்டாமவர். The Wordly Philosophers நூலில் அதன் ஆசிரியர் கார்ல் மார்க்ஸுக்கும் இதில் வரும் மனிதருக்கும் ஒரே எண்ணிக்கையில் பக்கங்கள் ஒதுக்கி இருக்கிறார். மூளை நரம்பு பாதிக்கப் பட்டவர் போல் நடந்து கொண்டவர், எதிலும் பற்றில்லாத துறவி … Continue reading உன் பார்வை போலே என் பார்வை இல்லை

ஆயிரத்தில் ஒருவன்

இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் போது, முதலில் கார்ல் மார்க்சுக்கு முன்னாடி என்று தலைப்பு வைக்கலாம் என்று நினைத்தேன். ஒருவேளை என் இடதுசாரித் தோழர்கள் முகம் சுளிப்பார்களோ? தயக்கம் . கடைசியில் ஆவன்னா ஓனா. 15 -16 ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சி அல்லது மறுமலர்ச்சி என்பது அய்ரோப்பாவில் கிடுகிடுவென்று வளர்ந்து விடவில்லை. 500 ஆண்டுகளாக, எழுந்து, விழுந்து, ஒடி, நடந்து, தேங்கி நின்று என்று பல கட்டங்கள் தாண்டி 21 ம் நூற்றாண்டில் வந்து நிற்கிறது. … Continue reading ஆயிரத்தில் ஒருவன்