காசு நம் அடிமை – 1

தொடர் -1 பணம் ஒரு மூக்கணாங்கயிறு போன்றது . அதுவும் இரும்பால் செய்த மூக்கணாங்கயிறு. உங்களை எங்கே வேண்டுமானாலும் இழுத்துக் கொண்டு போகலாம். ஆனால் அதை வடிவமைத்து மூக்கில் மாட்டிக்கொண்டதே நாம் தான் என்பதை மட்டும் மறந்துவிட்டோம். - மார்க் கின்னி பணம் எல்லாருக்கும் தேவை. பணம் என்பது நம் பொருளியல் தேவைகளைப்  பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்ல, நம் உறவுகள், தொடர்புகள், உணர்வுகள் எல்லாவற்றையுமே அது பாதிக்கிறது. ஆனால் இன்றைய பணத்துக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. … Continue reading காசு நம் அடிமை – 1

காசு நம் அடிமை – 2

கடுமையாய் உழைத்து முன்னேறி  இன்று பணக்காரனாய் இருக்கிறேன் என்று யாராவது சொன்னால் அது யாரின் உழைப்பில் என்று திருப்பிக் கேளுங்கள்.  -ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தொடர் -2 (மானுடவியலாளர் டேவிட் கிரேபர்,  பொருளியல் பேராசிரியர் பெர்னார்ட் லீட்டேர், பொறியலாளர் மார்கரீட் கென்னடி, பொருளியல் மேதை கெயின்ஸ் ஆகியோரின் கருத்துக்கள் இந்தத் தொடரில் அலசப்படுகின்றன.) டேவிட் கிரேபர் தொடர்ந்து பேசுகிறார்: அடிமை வர்த்தகம் எல்லா சமுதாயங்களிலும் இருந்திருக்கிறது. அன்றைய சந்தைகளில் போர்வீரர்களை எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அடுத்து, அவர்கள் தேவைகளை நிறைவேற்ற … Continue reading காசு நம் அடிமை – 2

காசு நம் அடிமை – 3

காசு பேசும் என்பதை நீங்கள் நம்புவீர்களா இல்லையோ நான் நம்புகிறேன். ஒருநாள் அது சொன்னதை என் ரெண்டு காதாலும் கேட்டேனே: Goodbye. -ரிச்சர்ட் ஆர்மர்  தொடர் -3 பணத்தின் வரைவிலக்கணம்  பேராசிரியர் ஜியோப்ரே இங்காம் பணத்தின் ஐந்து தன்மைகள் பற்றி சொல்கிறார். (அதில் கொஞ்சம் தண்ணி கலந்திருக்கிறேன்): Money of account - மனிதர்கள் பொதுவாய் மற்றவர்களின் தரம் பற்றித்தான் பேசுவது வழக்கம். தன் தரம் பற்றி மூச்சு விடமாட்டார்கள். பணமும் அப்படியே. தன சொந்த மதிப்பைப் பற்றிக் … Continue reading காசு நம் அடிமை – 3

காசு நம் அடிமை – 4

பணப் பற்றாக்குறை,  தீமைகளின் வேர். - ஜார்ஜ் பெர்னார்ட் ஷா  தொடர் - 4 வங்கிகளின் புது அவதாரங்கள் 18 ம் நூற்றாண்டுகளில் அய்ரோப்பிய நாடுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. விவசாயத்தை நம்பியிருந்த சமுதாயங்கள் எந்திர யுகத்தை  நோக்கிப் பயணிக்கத் துவங்கின. புதுத் தொழில் பேட்டைகள், புதுத் தொழில்கள், வேகமாக செல்லக்கூடிய போக்குவரத்து சாதனங்கள், நவீன தொடர்பு வசதிகள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ராணுவம், காலனி நாடுகளை உருவாக்க வேண்டிய தேவைகள் எல்லாம் சேர்ந்ததில், அதற்கு ஏற்ற ஓர் … Continue reading காசு நம் அடிமை – 4

காசு நம் அடிமை – 5

வங்கியாளர் என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள்? வெய்யில் அடிக்கும் போது அவர் குடையை கடனாகத் தருவார். மழை அடிக்கும் போது திருப்பி வாங்கிக் கொள்வார்.  -மார்க் ட்வையின்  தொடர் - 5 வட்டியின் மூன்று சித்து விளையாடல்கள்  1) அது போட்டியை ஊக்குவிக்கிறது.  வட்டி தான் பணத்தின் மூலம் போட்டியை உருவாக்கி, அதை வேகத்தோடு ஊக்குவிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு வங்கியாளரிடம் போய், உங்கள் காணியை ஈடு வைத்துக் கடனாக … Continue reading காசு நம் அடிமை – 5

காசு நம் அடிமை – 6

எங்கே தேடுவேன் ? பணத்தை எங்கே தேடுவேன்? -கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தொடர் - 6 சில்வியோ கெசெல் (Silvio Gesell)  முதலாளித்துவ பொருளியல் கோட்பாடுகளுக்கு அடித்தளம் போட்டவர்களில் முக்கியமானவர் ஆடம் ஸ்மித் என்பதை அறிந்திருக்கிறோம். பொருளியலில் பொதுவுடைமைக் கோட்பாட்டைத் தடம் பதித்தவர் கார்ல் மார்க்ஸ் என்றும் அறிந்திருக்கிறோம். பொருளியல் மறந்துவிட்ட அல்லது அது அலட்சியம் செய்த அடித்தளமான துறை ஒன்று உண்டு என்றால் அது பண அமைப்பாகத் தான் இருக்க முடியும். பண அமைப்புக்குப் … Continue reading காசு நம் அடிமை – 6

காசு நம் அடிமை – 7

என் வாழ்க்கையின் மதிப்பை  ஒரு இலக்கம்  முடிவு செய்வதா? -யாரோ  தொடர் -7 மூன்றாம் உலக நாடுகள் நிதிப் பற்றாக்குறையை சரிசெய்ய அந்த காலத்தில் ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டைக் கொள்ளை அடிப்பதில் நாட்டம் காட்டின என்று கண்டோம். அடிமை வர்த்தகமும் அதில் அடக்கம். இன்று என்ன நடக்கிறது? வளர்முக நாடுகள் என்று சொல்லப்படும் நம் நாடுகளுக்கு, ஏகாதிபத்தியங்கள் அரசியல் விடுதலை கொடுத்துவிட்டாலும் அவர்களின் பொருளாதாரப் பிடியில் விடுதலை கிடைத்துவிட்டதா? அடிமை வர்த்தகம் இப்போது இல்லையா? மேற்கு … Continue reading காசு நம் அடிமை – 7

காசு நம் அடிமை – 8

வருமான வரி கட்டும்போது புன்னகை செய்யுங்கள் என்கிறார்கள்.  நானும் புன்னகை செய்து பார்த்தேன். அவர்கள் சொன்ன பதில் : புன்னகை  எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். காசு எங்கே? -ஜாக்கி மேசன்  தொடர் - 8 இந்தத் தொடர் இத்துடன் முடியவில்லை. தொடரட்டுமே. இதுவரை வாசித்தவர்கள்  அனைத்தையும் விவாதப் பொருளாக்கினால் அடுத்த தளம் நோக்கிப் போகலாம். மேலும் சில குறிப்புகள்: மார்கரீட்  கென்னடியின் Interest and Inflation Free Money புத்தகம் தான் இந்தத்  தொடரை எழுதத் தூண்டியது. … Continue reading காசு நம் அடிமை – 8