என்ன விலை அழகே

நம்ப முடியாது தான். இருந்தும், ஏமாற்று வேலை, பகல் கொள்ளை, தில்லுமுல்லு என்று பலவிதமான தொழில்களுக்கு இன்று சட்ட ரீதியான அனுமதி உண்டு. ஆனால் அதை நீங்களோ நானோ செய்தால் நிச்சயம் மாட்டிக் கொள்வோம். அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும். இன்றைய உலகின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரு மதிப்பு அல்லது விலை உண்டு என்பதை மறுக்க முடியாது. அன்பு-பாசம்-நேசத்துடன் பகிர்ந்து கொள்ளும் எதையும் தவிர, மற்ற எதுவுமே சும்மா கிடைக்காது. மதிப்பு என்றால் என்ன? எப்படி உருவாகிறது? மதிப்பின் … Continue reading என்ன விலை அழகே

பொருளியல் பார்வைகள் (பெட்டிஃபோர்)

வங்கிகள் அவசியம் தான். ஆனால், அவர்களைக் கண்மூடித்தனமாக ஆட்டம் போடவிட்டால் ஆபத்து. ஏற்கெனவே பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்திருக்கிறோமே. இன்னுமா நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை? பொருளியல் பேராசிரியர் ஆன் பெட்டிஃபோர் (Ann Pettifor) கேட்கிறார். அவர் எழுதிய The Production of Money - how to break the power of banks என்கிற சிறு நூலில் இருந்து சில கருத்துக்கள் - என் பார்வையில். இவை செல்வந்த நாடுகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்து வரும் … Continue reading பொருளியல் பார்வைகள் (பெட்டிஃபோர்)

பொருளியல் பார்வைகள் – 1 (ஸ்ட்ரேக்)

முதலாளித்துவத்தின் முடிவு எப்படி இருக்கும்? நம் காலத்திலேயே  அந்தக்  காட்சியைக் கண்ணாரப்  பார்த்துவிடலாம் என்று கார்ல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் மட்டுமா நம்பினார்கள்?  ஜெர்மனியின் பிரபல பொருளியல், சமூக இயல் பேராசிரியர் வூல்ப்காங் ஸ்ட்ரேக் (Wolfgang Streeck) அவரின் How Capitalism Will End? என்கிற நூலில் இப்படி ஆரம்பித்துப் பேசுகிறார். (இது மேற்கு நாடுகள் பற்றிய ஆய்வு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். தவிர, வழக்கம் போல் தண்ணி கலந்திருப்பதையும் மறந்து விடவேண்டாம். ) தொடர் (1) ரிக்கார்டோ, சொம்பார்ட், கெயின்ஸ், … Continue reading பொருளியல் பார்வைகள் – 1 (ஸ்ட்ரேக்)

பொருளியல் பார்வைகள் – 2 (ஸ்ட்ரேக்)

நானே கடனை உருவாக்குகிறேன். நானே அதை அழிக்கிறேன். நீ வெறும் கருவி மட்டுமே. என்னிடம் சரணடைந்து விடு. கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. என்னிடம் வாங்கிய கடனை ஒழுங்காய்க் கட்டு. தொடர் 2 மேலே சொல்லப்பட்டது நவீன சந்தைப் பொருளாதாரம் சொல்லும் கீதையின் சாரம். அர்ஜுனனிடம் திறமை இருந்திருக்கலாம். ஆனாலும் அவர் கீனா பானாவை முழுமையாய் நம்பியதால் தானே வெற்றி பெற முடிந்தது? அதே போல, நீங்கள் என்ன தான் கில்லியாய் இருந்தாலும் சானா போனாவை முழுமையாய் நம்பினால் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் … Continue reading பொருளியல் பார்வைகள் – 2 (ஸ்ட்ரேக்)

பொருளியல் பார்வைகள் – 3 (ஸ்ட்ரேக்)

முதலாளித்துவம் எல்லாவற்றையும் விழுங்கிய பின் தன்னைத்தானே விழுங்க ஆரம்பிக்கும். அதன்  முடிவு நரகம் தான். அப்போது கூட, அதன் பசி தீராமல் , மயக்கத்தில் தள்ளாடித் தள்ளாடி... - பேராசிரியர் ஸ்ட்ரேக் தொடர் 3 (நூலின் கடைசி அத்தியாயத்துக்கு வந்திருக்கிறோம். பேராசிரியர் இத்தாலி, கிரேக்கம், ஒன்றிய நாடுகள் என்று விலாவாரியாய் அந்தந்த நாடுகளின் பொருளாதார சிக்கல்களையும் தவறுகளையும் விவரித்துக் கொண்டு போகிறார். இங்கே அவை தவிர்க்கப் பட்டுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் நூலை வாங்கி வாசிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அவரின் கருத்துக்கள் மட்டுமே இந்தத் தொடர்களில் சொல்லப்படுகின்றன.) பொருளியல் என்று … Continue reading பொருளியல் பார்வைகள் – 3 (ஸ்ட்ரேக்)