ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து

எப்ப பாத்தாலும் தண்ணியிலேயே இருந்தா உருப்பட்ட மாதிரி தான். அநியாயமா செத்துப் போயிருவீங்க. நான் இருக்கேன்ல. வாங்க மச்சி என்று தாவரங்களைப் பார்த்து பூஞ்சை கூப்பிட்டிருக்காவிட்டால்...விட்டால்... அப்ரமென்ன.. பூமியின் கதையே மாறிப் போயிருக்கும். எல்லா உயிர்களும் கடலில் இருந்து தான் நிலத்துக்கு வந்தன என்பது தெரிந்ததே. இருந்தும் கிட்டத்தட்ட 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தாவர இனம் நிலத்துக்குக் குடி பெயர உதவிய அப்பேர்ப்பட்ட பூஞ்சை இனத்தை எப்படி, எந்த உயிரினத்துள் வகைப்படுத்துவது? உயிரியலாளர்கள் இன்று வரை … Continue reading ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து

நல்லவன் எனக்கு நானே நல்லவன்

மனிதர்கள் எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அன்பானவர்கள், பண்பானவர்கள், பாச மலர்கள், பன்னாடைகள், படா கிரிமினல்கள், பைத்தியங்கள், எதிலும் சேர்த்தி இல்லாத காமா சோமாக்கள் என்று எத்தனையோ ரேஞ்சுகளில் பார்க்கிறோம். மனிதர்களின் குணாதிசயங்கள் ஏன் இப்படி ஒரே கராபுராவாய் இருக்கின்றன? விடை ஒன்றல்ல. பல விடைகள் இருக்கின்றன என்கிறார் மூளை நரம்பியல் பேராசிரியர் சப்போல்ஸ்கி (Robert Sapolsky). அவர் எழுதிய Behave என்கிற நூல் நூலே அல்ல - அது ஓர் பெரும் அறிவுக் களஞ்சியம். 2017 … Continue reading நல்லவன் எனக்கு நானே நல்லவன்

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை (1)

உயிர் வாழ்தல் என்றால் என்ன? இந்தக் கேள்வியை உயிரியலில் மட்டுமல்ல, வேதியியல், மரபணு இயல் என்று பல துறைகளில் நின்று விவரிக்கும் நிலைகளுக்கு இன்று நாம் முன்னேறி வந்திருக்கிறோம் . அப்போ, இயற்பியல் மட்டும் என்ன கை கட்டியபடி ஒரு ஓரமாய் நின்று பார்த்துக் கொண்டிருப்பதா? இயற்பியலில் எங்கெல்லாம் சர்ச்சைகள் இருக்குமோ அந்தக் கூட்டத்தில் பேராசிரியர் Paul Davies நிச்சயம் இருப்பார் என்பது தெரிந்த தகவல். உயிரியலில், அவரின் அண்மைய நூலுக்கு (The Demon in the … Continue reading நான் நிரந்தரமானவன் அழிவதில்லை (1)

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை (2)

உயிர் வாழ்தல் நிலையை விளையாட்டு, குவாண்டம் தன்மைகளோடு ஒப்பிடுகிறார் பேராசிரியர். விளையாடு மங்காத்தா எந்த விளையாட்டுக்கும் அடிப்படை விதிகள். விதிகளை மீற முடியாது. விளையாடும்போது அதில் வருகிற சிலிர்ப்பு, கிடைக்கிற கிக் எல்லாம் தாண்டி உணர்ச்சி வசப்படாமல் கவனித்தால் அதில் கூட மாறிக் கொண்டே இருக்கும் கணித வடிவங்கள் (mathematical patterns) தென்படுகின்றன. சிக்கல் என்பது கூடிக் கொண்டே இருக்கிறது. அடுத்த கணம் என்ன நடக்கப் போகிறது? தெரியாது. கீழ் உள்ள Game of Life விளையாட்டில் … Continue reading நான் நிரந்தரமானவன் அழிவதில்லை (2)

அண்ணே பாக்டீரியா, நீங்க நல்லவரா கெட்டவரா?

நம் உடம்பில் இருக்கும் செல்கள் வீராதி வீரர்கள் என்று ரொம்ப காலமாக நம்பிக் கொண்டிருந்தார்கள் உயிரியல் வல்லுநர்கள். அது மட்டுமல்ல, நம்மைத் தாக்க வரும் வைரஸ்களை விரட்டி அடிக்கக் கூடிய  சூராதி சூரர்கள் என்று வேறு புகழ்ந்து கொண்டிருந்தார்கள். எல்லாம் போச்!...  அறிவியல் எழுத்தாளர், ஜெனிபர் ஆக்கர்மன் (Jennifer Ackerman)  (ஆ - ச்சூ! என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி  சிறந்த அறிவியல் புத்தகம் என்று பரிசு வாங்கியவர் இவர். நீர்க்கோப்பு (ஜல தோஷம்) பற்றி ஆராய்கிறது அந்தப் … Continue reading அண்ணே பாக்டீரியா, நீங்க நல்லவரா கெட்டவரா?

உலகம் பிறந்தது எனக்காக?

புல்லாகிப் பூடாய், புழுவாய் மரமாகி ... இன்று மனிதராய் வந்து நிற்கிறோம். எப்படி சாத்தியமாயிற்று? எல்லாம் கூட்டுறவு தான். சுயநலமா? பொதுநலமா? சொல் மனமே.  (பேராசிரியர் மார்ட்டின் நோவாக் எழுதிய கட்டுரையை என் கோணத்தில் அணுகியிருக்கிறேன்.) 2011 களில் ஜப்பான் பூக்குஷீமா அணு உலையில் ஏற்பட்ட அணுக்கசிவு. எவரும் அந்த நிலப்பரப்பில் கால் வைக்கக் கூட அஞ்சுகிறார்கள். ஒரு 20 வயது வாலிபன் சொல்கிறான்: நான் உள்ளே போய் என்னால் முடிந்ததை செய்கிறேன். அந்த நிலத்தின் மேல் … Continue reading உலகம் பிறந்தது எனக்காக?