பொருளியல் பார்வைகள் – 2 (ஸ்ட்ரேக்)

நானே கடனை உருவாக்குகிறேன். நானே அதை அழிக்கிறேன். நீ வெறும் கருவி மட்டுமே. என்னிடம் சரணடைந்து விடு. கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. என்னிடம் வாங்கிய கடனை ஒழுங்காய்க் கட்டு. தொடர் 2 மேலே சொல்லப்பட்டது நவீன சந்தைப் பொருளாதாரம் சொல்லும் கீதையின் சாரம். அர்ஜுனனிடம் திறமை இருந்திருக்கலாம். ஆனாலும் அவர் கீனா பானாவை முழுமையாய் நம்பியதால் தானே வெற்றி பெற முடிந்தது? அதே போல, நீங்கள் என்ன தான் கில்லியாய் இருந்தாலும் சானா போனாவை முழுமையாய் நம்பினால் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் … Continue reading பொருளியல் பார்வைகள் – 2 (ஸ்ட்ரேக்)

பொருளியல் பார்வைகள் – 3 (ஸ்ட்ரேக்)

முதலாளித்துவம் எல்லாவற்றையும் விழுங்கிய பின் தன்னைத்தானே விழுங்க ஆரம்பிக்கும். அதன்  முடிவு நரகம் தான். அப்போது கூட, அதன் பசி தீராமல் , மயக்கத்தில் தள்ளாடித் தள்ளாடி... - பேராசிரியர் ஸ்ட்ரேக் தொடர் 3 (நூலின் கடைசி அத்தியாயத்துக்கு வந்திருக்கிறோம். பேராசிரியர் இத்தாலி, கிரேக்கம், ஒன்றிய நாடுகள் என்று விலாவாரியாய் அந்தந்த நாடுகளின் பொருளாதார சிக்கல்களையும் தவறுகளையும் விவரித்துக் கொண்டு போகிறார். இங்கே அவை தவிர்க்கப் பட்டுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் நூலை வாங்கி வாசிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அவரின் கருத்துக்கள் மட்டுமே இந்தத் தொடர்களில் சொல்லப்படுகின்றன.) பொருளியல் என்று … Continue reading பொருளியல் பார்வைகள் – 3 (ஸ்ட்ரேக்)

நானே நானா யாரோ தானா

நான் என்று நினைக்கும்போது அது நான் மட்டும் தான் வேறு யாரும் அல்ல என்று நினைப்பது  பெரும் முட்டாள்த்தனம். மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சிந்திக்கும்போது தான் நான் என்னும் சுய உணர்வு தோன்றுகிறது என்கிறார் மைக்கேல் பாண்ட் (Michael Bond ). ஏற்கெனவே, நான் யார் என்கிற கட்டுரை ஒரு விதமாய்ப் பயமுறுத்த, மைக்கல் இன்னொரு விதமாய் மிரள வைக்கிறார். நம் கடந்த கால நினைவுகள் அடுக்குகளாய் நம் மூளையில் குவிகின்றன. அந்தக் களஞ்சியத்தில் இருந்து தான் இது நான், … Continue reading நானே நானா யாரோ தானா

அண்ணே பாக்டீரியா, நீங்க நல்லவரா கெட்டவரா?

நம் உடம்பில் இருக்கும் செல்கள் வீராதி வீரர்கள் என்று ரொம்ப காலமாக நம்பிக் கொண்டிருந்தார்கள் உயிரியல் வல்லுநர்கள். அது மட்டுமல்ல, நம்மைத் தாக்க வரும் வைரஸ்களை விரட்டி அடிக்கக் கூடிய  சூராதி சூரர்கள் என்று வேறு புகழ்ந்து கொண்டிருந்தார்கள். எல்லாம் போச்!...  அறிவியல் எழுத்தாளர், ஜெனிபர் ஆக்கர்மன் (Jennifer Ackerman)  (ஆ - ச்சூ! என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி  சிறந்த அறிவியல் புத்தகம் என்று பரிசு வாங்கியவர் இவர். நீர்க்கோப்பு (ஜல தோஷம்) பற்றி ஆராய்கிறது அந்தப் … Continue reading அண்ணே பாக்டீரியா, நீங்க நல்லவரா கெட்டவரா?

நான் யார்?

குடியிருந்த கோயில் படத்தில், நான் யார்? நீ யார்? நாலும் தெரிந்தவர் யார், யார்? என்று எம்ஜிஆர் பாடுவார். மற்றவர்கள் பதில் சொல்ல முடியாமல் முழிப்பார்கள். நான் ரசித்த காட்சி அது. நல்ல கேள்வியும் கூட. ஆனால் படத்தில் கடைசி வரை பதிலே இல்லை. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முனைகிறார் பேராசிரியர், ஜான் வெஸ்டர்ஹொப் (Jan Westerhoff). அவரின் கட்டுரை என் பார்வையில்: நான் யார் என்பது கடினமான கேள்வி தான். நான் என்பதற்கு என்ன … Continue reading நான் யார்?

உலகம் பிறந்தது எனக்காக?

புல்லாகிப் பூடாய், புழுவாய் மரமாகி ... இன்று மனிதராய் வந்து நிற்கிறோம். எப்படி சாத்தியமாயிற்று? எல்லாம் கூட்டுறவு தான். சுயநலமா? பொதுநலமா? சொல் மனமே.  (பேராசிரியர் மார்ட்டின் நோவாக் எழுதிய கட்டுரையை என் கோணத்தில் அணுகியிருக்கிறேன்.) 2011 களில் ஜப்பான் பூக்குஷீமா அணு உலையில் ஏற்பட்ட அணுக்கசிவு. எவரும் அந்த நிலப்பரப்பில் கால் வைக்கக் கூட அஞ்சுகிறார்கள். ஒரு 20 வயது வாலிபன் சொல்கிறான்: நான் உள்ளே போய் என்னால் முடிந்ததை செய்கிறேன். அந்த நிலத்தின் மேல் … Continue reading உலகம் பிறந்தது எனக்காக?

நம்பர்.. நம்பர்..

பைதகரஸ் சாமியார்னா சாமியார் தான். என்னா அம்சம்! என்னா அம்சம்! நீங்களோ, நானோ இத்தாலியின் கிரோட்டோன் நகரத்துக்கு சுற்றுலா போயிருந்தால் (இப்போ அல்ல. கி.மு. 600ம் ஆண்டு வாக்கில்) ... பிறகு ஊருக்குப் போய் யாரைக் கண்டாலும் இதைத்தான் சொல்லியிருப்போம். திருப்பித் திருப்பி. அவர்களும் நம்மைக் கண்டதுமே ஒடி ஒளியப் பார்த்திருப்பார்கள். (கிரீஸ் போய் வந்தது சரி. அதுக்காக இந்தக் கடி கடிக்கணுமா?) அவர்கள் தங்கம் போல் தகதகக்கும் பைதகரஸின் தொடைகளைப் பார்த்திருக்கிறார்களா?  இல்லையே. அவரின் பேரறிவு, … Continue reading நம்பர்.. நம்பர்..

ஜே.கிருஷ்ணமூர்த்தி

ஞானிகள் பலவிதம். சிலரைப் பார்த்தால் பயம் வரும். சிலரைப் பார்த்தால் வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும். சிலரைப் பார்த்தால் ரெண்டு விதமாகவும் தெரியும். சிலரின் பேச்சு விசித்திரமாக  இருக்கும். ஆனால் யோசிக்க, யோசிக்கப் புதுமையாக இருக்கும்.  அது ஒரு அனுபவம். "முதலும் கடைசியும் ஆன விடுதலை "  (The First And Last Freedom) ஜிட்டுவின் முதல் புத்தகம்  என்று நினைக்கிறேன். வாசிக்க ஆரம்பித்தபோதே பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் கூட்டங்களில் அடிக்கடி சொல்லுவார் : பெரியோர்களே, நான் சொல்வதை அப்படியே … Continue reading ஜே.கிருஷ்ணமூர்த்தி

நான் ரெடி.நஞ்சுக்கலவை ரெடியா?

சாக்ரட்டீஸ் ஏதென்ஸில் இருந்த சந்தைக்கு தினமும் நடந்து போவது வழக்கம். ஒன்று விடாமல் அங்கே இருந்த எல்லாப் பண்டங்களையும் ஒரு நோட்டம் விடுவார். அட! எனக்குத் தேவையே இல்லாத அத்தனையும் இங்கே குவிஞ்சிருக்கே... என்பார். பிறகு சந்தையைக் கடந்து போய்விடுவார். தினமும் இதே கூத்து. எத்தனையோ நூற்றாண்டுகளாக அவர் பெயரை உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த முன்னாள் தத்துவஞானியை அவர் கோட்பாடுகளுக்காக மட்டுமல்ல, அவரின் எளிமையான வாழ்க்கைக்காகவும் சேர்த்து மதிக்கிறது. ஒரு சிற்பியின் மகனாய்ப் பிறந்தவர், அன்றைய … Continue reading நான் ரெடி.நஞ்சுக்கலவை ரெடியா?

காசு நம் அடிமை – 1

தொடர் -1 பணம் ஒரு மூக்கணாங்கயிறு போன்றது . அதுவும் இரும்பால் செய்த மூக்கணாங்கயிறு. உங்களை எங்கே வேண்டுமானாலும் இழுத்துக் கொண்டு போகலாம். ஆனால் அதை வடிவமைத்து மூக்கில் மாட்டிக்கொண்டதே நாம் தான் என்பதை மட்டும் மறந்துவிட்டோம். - மார்க் கின்னி பணம் எல்லாருக்கும் தேவை. பணம் என்பது நம் பொருளியல் தேவைகளைப்  பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்ல, நம் உறவுகள், தொடர்புகள், உணர்வுகள் எல்லாவற்றையுமே அது பாதிக்கிறது. ஆனால் இன்றைய பணத்துக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. … Continue reading காசு நம் அடிமை – 1